2025 மே 01, வியாழக்கிழமை

அறிக்கையிடும் அரசியலை நாங்கள் மேற்கொள்ளவில்லை: அரியநேத்திரன்

Kogilavani   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

வெறுமனே பிரச்சனைகளை அரசியலாக்கவோ அல்லது அறிக்கையிடும் அரசியலையோ, நாங்கள் மேற்கொள்ளவில்லை. எமது மண்ணுக்காக, எமது இனத்திற்காக என்றென்றும முன்னின்று துணிந்து சென்று செயற்படுபவர்களாகதான் நாங்களும் எமது கட்சியும் என்பதனை நாம் ஏனை அரசியல்வாதிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்' என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதாரண பிரச்சனைகளை அரசியலாக நோக்குகின்றது' என ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம்; அண்மையில் தெரிவித்திருந்தார்.

இவரின் கருதினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் முற்றாக மறுக்கின்றோம்.

மட்டக்களப்பு, மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள பட்டிப்பளை பிரதேசத்தின் பிரதேச செயலகத்திற்கு அத்துமீறி நுளைந்த பௌத்த மதகுரு ஒருவரின் செயல்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் மிகவும் வன்மையாகக் கண்டித்திருந்தோம்.

எமது கண்டனத்தினை அவதானித்த ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இப்பிரச்சனையினை அரசியலாக மாற்றுகின்றோம் என சுட்டிக் காட்டியிருந்தார்.

மக்கள் நலம் சார்ந்து செயற்படும் எம்மையும் எமது செயற்பாட்டையும் எமது கட்சியினையும் பற்றிக் கதைப்பதற்கோ பேசுவதற்கோ சாணக்கியனுக்கு அரசியல் ஞானம்போதாது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மக்களின் பிரச்சனைகளை அரசியலாக நோக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் அன்றைய இக்கட்டான காலகட்டத்திலேயே நோக்கியிருப்போம். நாங்கள் என்றென்றும் எம் இனத்திற்காகப் பாடுபடுவர்கள் என்பதனை மட்டும் சாணக்கியன் போன்றவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சி.மு.இராசமாணிக்கம்; கொள்கைகளையும் சிந்தனைகளையும் அவரது பேரனாகிய சாணக்கியன் தவறாகப் புரிந்துகொண்டு சி.மு.இராசமாணிக்கம்; இட்ட செயற்பாடுகளை நிந்தித்து வருகின்றார்.

அரசயலில் சாணக்கியம் உடையவர்கள் நாங்கள். எங்களைத் திருத்தவோ அல்லது ஒப்பனை செய்யவோ எமக்கு யாரும் தேவையில்லை. நாங்கள் எம்மக்களுடன் இணைந்து எதனையும் சாதிப்போம். பட்டிருப்புத் தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை வளர்ப்பதற்காகச் செயற்பட்டால் அதற்கு நாங்கள் தடையல்ல. ஏனெனில் ஒருமனிதன் தனது வாக்குரிமையினை ஒரு கட்சிக்கு வழங்குவது அவனது உரிமை.

இதனை விடுத்து எமது மக்களையும் எம்மையும் முரண்பாடுகளுக்குள் தள்ள நினைப்பது என்பது ஒரு எட்டாக்கனியாகவே அமையும்' என்பதனையும் நாம் தெரிவித்துக் கொள்கின்றோம்' என நாhடளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .