2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஐந்து இலட்சம் ரூபா செலவில் கலசார நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 03 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியின் கிரான்குளத்தில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டிடம் கிழக்கு மாகாண சுகாதார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஐந்து இலட்சம் ரூபா செலவில் கலசார நிலையமாக புனரமைப்பு செய்யப்பட்டு மக்களின் பாவனைக்காக ஞாயிற்றுக்கிழமை (2) திறந்து வைக்கப்பட்டது.

மண்முனைப் பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர், எஸ்.சிவபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண சுகாதார, கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

'இப்பிரதேச மக்களின் கலை,கலாசார,பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வுகள் இக்கட்டிடத்தில் நடைத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது' என மண்முனைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ்.சிவபாதசுந்தரம் இதன்போது தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .