2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நான்கு குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின்  காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள 04 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக கூரைத்தகரங்கள் புதன்கிழமை (05) வழங்கப்பட்டன.

இதன்போது ஒவ்வொரு  குடும்பத்திற்கும் 12,000 ரூபா பெறுமதியான 10  கூரைத்தகரங்களை வழங்கியதாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,  காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், கிராம அலுவலகர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இதேவேளை, கடந்த வாரம் 10 குடும்பங்களுக்கு கூரைத்தகரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X