2025 மே 02, வெள்ளிக்கிழமை

பட்டிப்பொங்கல் விழா

Kogilavani   / 2014 பெப்ரவரி 06 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் நுண்கலைத்துறையின் இறுதி வருட மாணவர்கள் மற்றும் நுண்கலைத்துறைத் தலைவர் தலைமையில் பட்டிப் பொங்கல் விழா புதன்கிழமை (5) கிழக்குப் பல்கலைக்கழத்தில் இடம்பெற்றது.

இதில் பல சம்பிரதாய நிகழ்வுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இந்தக் கலந்துiராயாடலின்போது 'உள்ளுர் மாடுகளுக்கும், வெளிநாட்டு செயற்கை மாடுகளுக்கும் இடையிலான நன்மை தீன்மைகள்' பற்றி விவாதிக்கப் பட்டதோடு, இந்த விவாதத்தின்போது எடுத்துரைக்கபட்ட நன்மை தீமைகளை சமூகம் சார்ந்து கொண்டு செல்வது எனவும் பேசப்பட்டன.

உள்ளூர் கறவைப் பசுக்களை விருத்தி செய்வது பற்றி கிழக்குப் பல்கலைக் கழத்தின்  2 ஆம், 3 ஆம் வருட மாணவர்களினால் வீதி நாடகம் ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

இப்பாரம்பரிய நிகழ்வில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக் மாணவர்கள், கலைஞர்கள், உள்ளுர் மாட்டுப் பண்ணையாளர்கள்,  பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .