2025 மே 03, சனிக்கிழமை

களுதாவளை தபாலகம் உடைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளை தபாலகம் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை தபாலக வேலைகள் முடிந்தவுடன் காரியலயத்தினை பூட்டிவிட்டுச் சென்றதாகவும் திங்கட்கிழமை (24) தாபாலகத்தின் முன் கதவினை (கேற்றினை) திறந்து உள்ளே நுழைந்தபோது தாபால் காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதனை அவதானித்ததாக களுதாவளை தபாலகத்தின் தபாலதிபர் தெரிவித்தார்.

பின்னர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் தபாலகத்தின் பெட்டகம் அப்படியே இருப்பதாகவும் ஆனால், காரியாலய மேசையிலிருந்த கோவைகள், ஆவணங்கள் என்பன கீழே விழுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

'கிழக்கு மாகாணத்தில் இனந்தெரியாதவர்கள் தபாலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது வேதனைக்குரிய விடயம். இதுவரை கிழக்கு மாகாணத்தில் 7 தபாற் காரியாலயங்கள் உடைக்கப்பட்டுள்ளதுடன்; 270,000 ரூபா நிதி மொத்தமாக களவாடப்பட்டுள்ளது' என தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண நுண் ஆய்வு பரிசோதகர் எம்.சற்.எம்.பாறுக் தெரிவித்தார்.

'கிழக்கு மாகாணத்தில் சவளக்கடை உபதபாலகம், மஞ்சந்தொடுவாய் உபதபாலகம், இறக்காமம் தபாலகம், கோட்டக்கல்லாறு தபாலகம், சாய்ந்தமருது தபாலகம், கல்லாறு தபாலகம், களுதாவளை தபாலகம், ஆகிய தபாலகங்களே இனந்தெரியாத நபர்களினால் இவ்வாறு உடைக்கப்பட்டன.

இவற்றுள் 2 உப தபாலகங்களும் 5 தபாலகங்களும் அடங்குவதாக தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண நுண்ஆய்வு பரிசோதகர் எம்.சற்.எம்.பாறுக் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X