2025 மே 03, சனிக்கிழமை

தற்கொலை அங்கிகள் இரண்டு மீட்பு

Kanagaraj   / 2014 பெப்ரவரி 24 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடு ஒன்றினுள்ளிருந்து 3 கிலோ   மற்றும் 5 கிலோ நிறை கொண்ட இரண்டு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டு உக்கிய நிலையில் புதைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு தற்கொலை அங்கிகளும் இராணுவத்தினரால் இன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் மீட்கப்பட்டு, மாலை 5 மணியளவில் செயலிழக்கப்பட்டன.

வெலிக்கந்தையிலுள்ள இராணுவ தலைமையகப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே இந்த தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளால் மட்டக்களப்பு பிரதேசத்தில் தாக்குதல்களை நடத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டவையாக இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X