2025 மே 03, சனிக்கிழமை

இறைச்சி வியாபாரிகளிடமிருந்து மருத்துவ அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன

Kogilavani   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள மாட்டு இறைச்சி மற்றும் ஆடு, கோழி இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளினது உடல்நிலை மற்றும் அவர்களின் சுகாதாரம் போன்றவற்றை அறிந்து கொள்வதற்காக காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் மருத்துவ அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

இதற்காக அவர்களின் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டு அந்த அறிக்கையினை காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்குமாறு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நசிர்தீன் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இந்த மருத்துவ அறிக்கையினை ஒப்படைக்காத மேற்படி வியாபாரிகளுக்கு இவ்வாண்டுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி வியாபரிகளுடன் உணவுப் பொருட்கள் விற்பணை செய்யும் வியாபாரிகளிடத்திலிருந்தும் இந்த மருத்துவ அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன.

தொற்றுநோய் மற்றும் அவர்களின் உணவுப் பாதுகாப்பு முறை பற்றி அறிந்து கொள்வதற்காகவே இந்த மருத்துவ அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறான மருத்துவ அறிக்கை காத்தான்குடிநகர சபை பிரிவிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவுச்சாலைகள், சிற்றுண்டிச்சாலைகள், வெதுப்பகங்கள்; என்பவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு தொழில் புரியும் ஊழியர்களிடம் ஏற்கனவே காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X