2025 மே 03, சனிக்கிழமை

கோழி வளர்ப்பாளர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் திவிநெகும திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்பவர்களுக்கான செயலமர்வொன்று செவ்வாய்க்கிழமை (25) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 18 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் இருந்தும் திவிநெகும திட்டத்தின் கீழ் கோழி வளர்ப்புக்காக தெரிவு செய்யப்பட்ட 100 பயணாளிகள் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது கோழி வளர்க்கும் முறை, அதனால் ஏற்படும் வாழ்வாதார மேம்பாடு குறித்து விளக்கி கூறப்பட்டன.

தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு விரைவில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.கருணாகரண் தெரிவித்தார்.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணி;ப்பாளர் கே.கருணாகரன், முகாமைத்துவ உதவியாளர் ஏ.லிங்கேஸ்பரன், கால்நடை உத்தியோகத்தர் வி.கோவேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.முஸப்பர் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X