2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உபதபாலகம், பட்டறைக் கடைகள் உடைப்பு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்திலுள்ள உப தபாலகமொன்றும் 03 நகை  பட்டறைக் கடைகளும் இனந்தெரியாதோரினால் சனிக்கிழமை (01) இரவு உடைக்கப்பட்டுள்ளதாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தபாலகத்தின் முன்கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்தவர்கள் பெட்டகத்திலிருந்து  900 ரூபா கொள்ளையிட்டுள்ளனர். இதேவேளை, பட்டறைக் கடைகளிலிருந்து எவ்வித  பொருட்களும் கொள்ளையிடப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

சனிக்கிழமை (01) அரைநாளுடன் வேலை முடிந்து தபாலகத்தை பூட்டிவிட்டுச் சென்றதாக ஒந்தாச்சிமடம் உபதபாலக அதிபர்  தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 08 தபாலகங்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில்  03 உப தபாலகங்களும் அடங்குவதாக  தபால் திணைக்களத்தின் கிழக்கு மாகாண நுண்ணாய்வு பரிசோதகர் எம்.இஸட்.எம்.பாறுக் தெரிவித்தார்.

கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவலையளிக்கின்றது. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்துச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும் அவர் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X