2025 மே 03, சனிக்கிழமை

மண்முனை மேற்குப் பிரதேச மட்ட குழு அமைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 05 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மண்முனை மேற்குப் பிரதேசத்தில் உள்ள கைதிகளின் குடும்பங்களின் நலன்புரி அபிவிருத்தி மற்றும் பின்னூட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மண்முனை மேற்குப் பிரதேச மட்டக்குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

இக்குழு அமைப்பது தொடர்பான கூட்டம் மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலே மேற்படி குழு அமைக்கப்பட்டது.

இக் கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, வவுணதீவுப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.ஐ.வகாப்தீன், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சமூக சீர்திருத்த உத்தியோகஸ்தர் எஸ்.தயானந்தன் மற்றும் பிரதேச செயலக துறைசார் வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

அமைக்கப்பட்ட இக் குழுவானது பிரதேசத்தில் உள்ள கைதிகளின் குடும்பங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவில் சமூக சீர்திருத்தத்துக்கு உள்ளாக்கப்பட்ட கைதிகளின் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X