2025 மே 03, சனிக்கிழமை

பிரேரணையை எதிர்க்குமாறு முஸ்லிம்களிடம் கோரிக்கை

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன் 


'ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை எதிர்த்து இலங்கைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்குமாறு முஸ்லிம் நாடுகளை கிழக்கு மாகாண முஸ்லிம் பிரஜைகள் சமூக அமைப்பு கோரியுள்ளது.
 
ஜெனீவாவில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முறிடியக்கப்படல் வேண்டுமெனவும்  அமைப்பு கேட்டுகொண்டுள்ளது.
 
இது தொடர்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் பிரஜைகள் சமூக அமைப்பு இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களின் கவனத்திற்கு மகஜரொன்றை புதன்கிழமை (5)  அனுப்பிவைத்துள்ளது.

அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'இந்த நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பூரண விசுவாசமான நேர்மையான சமூகமாக தாய்நாட்டுப் பற்றுள்ள குழுவினராக முஸ்லிம்கள் செயற்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.
 
அந்த வகையில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு இலங்கை முஸ்லிம்கள் விசுவாசத்தோடு செயற்பட்டு வருகின்றார்கள்.
 
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையினால் கொண்டு வரப்படும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வந்தால் இலங்கைச் சமூகம், பொருளாதார, அரசியல் ரீதியாக பாதிக்கப்படலாம். எனவே மேற்படி தீர்மானம் வெற்றி பெறாத வகையில் வலுவான எதிர்செயற்பாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும்.
 
அதை நாம் செய்யத்தவறினால் பொருளாதார தடை அமுலுக்கு வந்தால் போக்குவரத்து போசனை, சுகாதாரம், கல்வி, உயர்கல்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள், வெளிநாடுகளுக்கான புனித யாத்திரைகள், உல்லாசப்பயணிகளின் வருகை  போன்ற விடயங்களில் பாரிய சிக்கலையும் அவலங்களையும் அனைத்து இலங்கையர்களும் எதிர்கொள்ளும் அபாயம் பற்றி அறிவூட்ட வேண்டியது எமது பாரிய பொறுப்பாகும்.
 
போர் முடிவுக்கு வந்து ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இதனால் இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்த உண்மையான சுதந்திரம், நிம்மதியான பிரயானம், அகன்ற விசாரணை, அதிவேகப்பாதைகள், கார்பட் வீதிகள், இலாபமீட்டும் சந்தை வியாபாரங்கள் போன்ற பல்வேறு துறைகளும் அபிவிருத்தி அடைந்துள்ளன.
 
இலங்கையின் சரித்திரத்தில் இலங்கையின் எந்தவொரு அரசும் இது வரை மேற்கொள்ளாத பாரிய அபிவிருத்தியை ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மேற் கொள்வதன் ஊடாக ஒரு சில உலக நாடுகள் பொறாமை கொண்டு இங்கு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த ஜெனீவா அமர்வின் மூலம் காய் நகர்த்தும் துரோகத்தனத்தை செய்து கொண்டிருக்கின்றன.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானங்களுக்கு எதிராக தங்களின் நாடு இலங்கைக்கு ஆதரவாக செயற்பட ஆவனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக புதன்கிழமை(5) மாலை கொழும்பு நிப்போன் ஹோட்டலில்  கிழக்கு மாகாண முஸ்லிம் பிரஜைகள் சமூக அமைப்பினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.
 
இதில் கருத்து தெரிவித்த அந்த அமைப்பின் தலைவர் அஸ்ஸெய்க் எப்.ஏ.அன்சார் மௌலானா,

'இலங்கையிலுள்ள பிரச்சினையை இலங்கையிலேயே பேசித் தீர்க்க வேண்டும். அவற்றை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று தீர்க்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது.

முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்கள். அவர்கள் இந்த நாட்டை காட்டிக் கொடுப்பதற்கு ஒரு போதும் விரும்பவில்லை. இலங்கையின் தேசிய இனம் என்ற வகையிலும் நாட்டை நேசிக்கின்றவர்கள் என்ற வகையிலும் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணைக்கு  முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என்பதை நாங்கள் முஸ்லிம் நாடுகளுக்கு கூறிக் கொள்கின்றோம்' என்றார்.

இதேவேளை, இங்கு கருத்து தெரிவித்த அதன் செயலாளர் மௌலவி எஸ்.எல்.பரீட்

'இலங்கையினுடைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதையோ இலங்கையின் அதிகாரத்தில் வெளிநாடுகள் தலையீடு செய்வதையோ, இலங்கையில் சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதையோ இந்த நாட்டை நேசிக்கின்றவர்கள் என்ற வகையில் முஸ்லிம்கள் இதை அனுமதிக்க மாட்டோம்.

எங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை உள்நாட்டிலேயே பேசி தீர்வு கண்டு கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் அதிகாரத்தில் அவர்களின் சுதந்திரத்தில் வெளிநாடுகள் தலையீடு செய்வதற்கு எந்த அதிகாரமுமு; கிடையாது' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • S.Sinasudeen Friday, 07 March 2014 04:02 AM

    இந்த அமைப்பு, பள்ளிவாசல் உடைக்கும்போது எங்கே போனது?

    Reply : 0       0

    shamraan Friday, 07 March 2014 06:13 AM

    இங்க உடைக்குராங்க.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X