2025 மே 03, சனிக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் காயம்

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல் 


மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை (07) அதிகாலை 2 மணியளில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்குட்பட்டு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வென்னப்பூவைச் சேர்ந்த 40 வயதுடைய மாணிக்கம்-பிரதீப் என்பவரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளார்.

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த டொல்பின் ரக வான் ஒன்று களுதாவளைக்கூடாக சென்று கொண்டிருந்தபோத வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள மதகு ஒன்றினுள் பாய்ந்து மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் வானின் சாரதி காயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் குணசிங்கம்-சுகுணன் தெரித்தார்.

இவ்விபத்து இடம்பெற்ற வேளையில் சாரதி மாத்திம் வானில் இருந்துள்ளதாகவும், கட்நாயக்காவிலிருந்து கல்முனைக்கு சென்ற நபர்களை இறக்கிவிட்டு திரும்பி வரும் வழியிலே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X