2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

லொறி தீக்கிரை

Super User   / 2014 ஜூன் 24 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் லொறியொன்று செவ்வாய்க்கிழமை (24)  தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் தேங்காய் வர்த்தகத்தில் ஈடுபடும் கோட்டைக்கல்லாறு சந்தை வீதியினை சேர்ந்த எஸ். தங்கேஸ்வரன் என்பவரின் லொறியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இவ்வண்டியானது வியாபாரத்தை முடித்து விட்டு முல்லைத்தீவுக்கு திங்கட்கிழமை (23) காலை செல்லவிருந்துள்ளது.

அயலவர்கள் அதிகாலை லொறி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக தெரிவித்தபோது இந்த சம்பவம் தனக்கு தெரியவந்ததாகவும் தீயினை கட்டுபடுத்த முற்பட்டபோதிலும் லொறி முற்றாக எரிந்துவிட்டதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

தீக்கிரையாக்கப்பட்ட லொறியின் பெறுமதி சுமார் 16 இலட்சம் ரூபா என உரிமையாளர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். தனிப்பட்ட வியாபார போட்டிகள் காரணமாகவே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X