2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மாதுறு ஓயா நீர் விநியோகம் தடைப்பட்டதால் சிறுபோக செய்கை பாதிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மாதுறு ஓயா நீர் விநியோகம் தடைப்பட்டதால்  சுமார் 8 ஆயிரம் ஏக்கர் சிறுபோக விவசாயச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக, மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரனிடம் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிரான் குமாரத்தான் கோயிலில் நேற்று மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்தனர்.

வாழைச்சேனை கமநல கேந்திர நிலைய பிரிவில் உள்ள மினுமினுத்தவெளி, முறுத்தானை, அக்குறானை, சுரிச்சவத்தி, கோங்கையடி, புணானை போன்ற இடங்களில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந் நிலமை இப்போது மட்டுமல்லாமல் வருடா வருடம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இதற்கு ஒரு சரியானதொரு தீர்வினை பெற்று தருமாறு அமைச்சரிடம் முறையிட்டனர்.

மேற்படி விடயங்களை செவிமடுத்த அமைச்சர் இது தொடர்பாக நீர்பாசன திணைக்களத்தின் அமைச்சின் செயலாளருடன் உடனடியாக தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார்.

குறித்த பிரதேசங்களுக்கு நீர்வழங்குவதற்கான நடவடிக்கையை தாம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வதாக குறித்த அமைச்சின் செயலாளர் தம்மிடம் தெரிவித்ததாக, பிரதி அமைச்சர் விவசாயிகளிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சருக்கு தங்களது நன்றியை விவசாயிகள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .