2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வாகரையில் சு.க. அலுவலகம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 25 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்,எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதேச அலுவலகத்தை   வாகரை, அம்பந்தனாவெளிக் கிராமத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று புதன்கிழமை திறந்துவைத்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாகரை பிரதேச அமைப்பாளரும் மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான எஸ்.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அதிதிகளாக நகர அபிவிருத்தி அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பேர்டி பெரேரா, மீள்குடியேற்ற பிரதி அமைச்சரின் இணைப்பாளர் பொன். ரவீந்திரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் சந்திரபால உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது புதிதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டவர்களுக்கான கட்சி அங்கத்துவ அட்டைகளை அதிதிகள் வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X