2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தை வண்டபேர்க் பார்வை

Kanagaraj   / 2014 ஜூன் 26 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ நிலையத்தை, ஐரோப்பிய யூனியனின் இலங்கை மற்றும் மலைதீவுக்கான பிரதிநிதியும்,  செயலாற்றுகைப் பிரிவுத் தலைவருமான வில்லி வண்டபேர்க் நேற்று புதன்கிழமை பார்வையிட்டார்.

இவர் மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் யுனொப் திட்டத்தினர், மாநகரசபையினருடன் கலந்துரையாடினார்.
இதன்போது மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திண்மக்கழிவகற்றல் நடவடிக்கைகளையும் பார்வையிட்டு எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் குறித்தும் பேசினார்.

இதன் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்ட முகாமையாளர் சிமியோன் புரோற்றனி, யுனொப்ஸ் திட்டத்தின் திட்ட முகாமையாளர் சிலியா மார்குசி, வள மேம்பாட்டு முகாமையாளர் அனா சக்ரமென்ரோ, மட்டக்களப்பு மாநகரசபை உதவி ஆணையாளர் ரி.தனஞ்செயன், மட்டக்களப்பு மாநகர சபையின் பொறியியலாளர் கே.அச்சுதன், தொழில்நுட்பச் செயற்பாட்டு முகாமையாளர் பி.குருபரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X