2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 23 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் டெங்கு தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து, இப்பகுதியில் டெங்கு ஒழிப்பு வேலைகள் திங்கட்கிழமை(23) பிற்பகல் முதல்; மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இருதயபுரம் கிழக்கு பகுதியில் இந்த வாரம் நான்கு டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என  இருதயபுரம் பொதுச்சுகாதார பரிசோதகர் கே.ஜேசுராஜா தெரிவித்தார்.

இதனையடுத்து, இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபையின் உதவியுடன் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X