Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-யோ.சேயோன், எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகச் செய்கைக்கான ஆரம்பக்கூட்டங்களை இம்மாதம் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ஆம் திகதிவரை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கமநலசேவை உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று - நவகிரி, தும்பங்கேணி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக்கூட்டம் 26ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வெல்லாவெளி பிரதேச செயலகத்திலும் மண்முனை தெற்கு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கடுக்காமுனை, புழுக்குணாவை, அடைச்சகல், சிறிய நீர்ப்பாசனத்திட்டத்துக்கான கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்திலும் நடைபெறும்.
மண்முனை மேற்கு - வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவின் உன்னிச்சை, சிறு நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் 27ஆம் திகதி காலை 9.30 மணிக்கு வணவுதீவு பிரதேச செயலகத்தில் நடைபெறும். அதேநேரம் உறுகாமம், கித்துள்வௌ, வெலிக்காகண்டி, சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில்; நடைபெறும்.
கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப்பிரிவின், வாகனேரி, புணானை, தரவை, வடமுனை, சிறிய நீரப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக்கூட்டம் 28ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கோரகல்லிமடு றெஜி கலாசார மண்டபத்தில் நடைபெறும்.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் கட்டுமுறிவு சிறிய நீர்ப்பாசனத்திட்டங்கள், மதுரங்கேணி, கிரிமிச்சை சிறிய நீர்ப்பாசனத்திட்டங்களுக்கான ஆரம்பக்கூட்டம் காலை 9.30 மணிக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
36 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
45 minute ago
49 minute ago