Gavitha / 2015 பெப்ரவரி 24 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாடிக்கட்டடம் திங்கட்கிழமை (23) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்பரன் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டு இந்த பாடசாலை மாடிக்கட்டடத்தை திறந்து வைத்தனர்.
பாடசாலை அதிபர் எஸ்.மதிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மண்முனைப் பற்று கோட்டக்கல்விப்பணிப்பாளர் உட்பட அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பாடசாலைக்கான மாடிக்கட்டடம் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் 6.5மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.மதிசுதன் தெரிவித்தார்.

19 minute ago
35 minute ago
44 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
44 minute ago
48 minute ago