Sudharshini / 2015 மார்ச் 02 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில், விடுமுறை பெறாமல் கடமை நேரத்துக்கு முன்னராகவே பாடசாலைக்கு வருகை தந்து சேவையாற்றிய ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) அதிபர் எஸ். தில்லைநாதன் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த மாதம் எதுவித விடுமுறைகளும் பெற்றுக் கொள்ளாது மாணவர்களின் நலனில் ஈடுபாட்டுடன் நடந்துகொண்ட ஆசிரியர்களான விஜயலட்சுமி சுந்தரகுமார், சரஸ்வதிதேவி கௌரிகாந்தன், காதர் முஹைதீன் அப்துல் அனஸ், இராஜநாயகம் சுரேந்திரன் ஆகியோர் மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
அர்ப்பணிப்போடு வறிய மாணவர்களின் கல்வி நலன் கருதிச் சேவையாற்றும் ஆசிரியர்களை கௌரவித்து, ஊக்குவிப்பு அன்பளிப்பு வழங்கும் திட்டம் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ஈ. குணராசா, உறுப்பினர்களான சேகர் ராஜேஸ்வரி, கோபிநாத் வசந்தராணி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
3 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
8 hours ago