Gavitha / 2015 மார்ச் 22 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வல்லவாடி கிராமத்துக்கு இடம்பெயர்ந்த சிங்கள மக்களின் தேவைகள் தொடர்பாக கலந்துரையாடல் கூட்டமொன்று சனிக்கிழமை (21) வாழைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தல், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பொது மக்களால் பின்வரும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தங்களது காணிகள் இனங்காணப்படுவதுடன் அவை சரியான முறையில் நில அளவை செய்யப்பட்டு, உரிய காணி உடமையாளர்களுக்கு மீள வழங்க நடவடிக்கை எடுத்தல்.
காணிக்களுக்குரிய ஆவணம் (அரச ஒப்பம்) வழங்கப்படவேண்டும்.
அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
புதிய வீடுகள் மற்றும் வீதிகள் மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.
மீனவர் கிராமம் என்ற காரணத்தால் மீனவர்களுக்குரிய தொழில் வாய்ப்புக்கான தேவைகள் வழங்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனர்.
மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் ஆராய்ந்த பின்னர், இறுதியில் பின்வரும் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அவற்றுக்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவையாவன,
மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்களின் வீடு, காணி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
இதில் முதல் கட்டமாக, குறித்த வல்ல வாடி கிராமத்தில் மீள் குடியேற விருப்பமுள்ளவர்களை அடையாளம் காணல். அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்தல். அவ்வாறு மீள்க்குடியேறிய பின்னர் அவர்களுக்கான காணிகளை இனங்கண்டு, நில அளவை செய்து பிரித்து வழங்க நடவடிக்கை எடுத்தல்.
அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட்டன.
மேற்படி வல்லவாடி கிராமத்து மக்கள் இனப்பிரச்சினை காரணமாக, கடந்த 1990.06.11 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் தங்களது கிராமத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும்; 2010ஆம் ஆண்டில் 14 குடும்பங்கள் மீண்டும் குடியேறி வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
ஏனையோர் பொலன்னறுவை, கல்கமுவ, பேருவளை, காலி, நிக்கவரட்டிய, சிகிரிய, பதுளை, கொழும்பு என நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்த கிராம மக்கள் தங்களுக்குரிய முறையானதொரு மீள் குடியேற்றத்தை மேற்கொண்டு தரும்படி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

38 minute ago
50 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
1 hours ago
5 hours ago