2025 ஜூலை 09, புதன்கிழமை

மட்டக்களப்பில் 1,222 திட்டங்களுக்காக 7,451 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Princiya Dixci   / 2015 மே 07 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,222 திட்டங்களுக்காக 7,451 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எம்.அமீரலி, வியாழக்கிழமை (07) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களான சமுர்த்தி வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது.

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இவ்வாண்டு மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை ஆராயும் வகையில் இந்த அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த திட்டத்தின் கீழ் விசேட நிதியின் கீழ் 3,524 மில்லியன் ரூபாவும் கிழக்கு மாகாணசபையினால் 657 மில்லியன் ரூபாவும் அமைச்சுகளினால் 1,895 மில்லியன் ரூபாவும் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக 688 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.

அத்துடன், மாவட்டத்தில் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் பூர்த்தியடையாத வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .