2025 ஜூலை 09, புதன்கிழமை

'அபிவிருத்திக்குழுத் தீர்மானமின்றி அபிவிருத்திகளை முன்னெடுக்கக்கூடாது'

Suganthini Ratnam   / 2015 மே 07 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தீர்மானம் இல்லாமல் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும்  முன்னெடுக்கக்கூடாது என்று   மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தை மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில்  வியாழக்கிழமை (07) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  

'மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக வரும் எந்தவொரு நிதியும் அபிவிருத்தி செய்யப்படாமல் திருப்பியனுப்பக்கூடாது. இதில் அரசாங்க அதிகாரிகள் கவனமாக இருக்கவேண்டும். கடந்த காலத்தில்; இந்த நடைமுறை இருந்தது. இதை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவேண்டும்.

மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்கு தெரியாமல் எந்தவொரு அபிவிருத்தித்திட்டமும் மேற்கொள்ளக்கூடாது. இந்த அபிவிருத்திக்குழுவின் தீர்மானத்துடன், அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மாவட்டத்தில் எங்காயினும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமாயினும், இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறப்படவேண்டும்.

கடந்த காலத்தில்; மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஏதாவது பிரச்சினைகள் இருப்பின்,  இந்தக் கூட்டத்தில் அதை சமர்ப்பித்து அதற்கான தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .