2025 மே 17, சனிக்கிழமை

மாவட்ட அபிருத்திக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாத முன்னாள் அமைச்சர், பிரதியமைச்சர்கள்

Suganthini Ratnam   / 2015 மே 07 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் முன்னாள் அமைச்சர் பஷீர்  சேகுதாவூத் கலந்துகொள்ளவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம்,  மாவட்ட செயலக கூட்ட மண்டபத்தில்  வியாழக்கிழமை (07)  நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  புதிய அரசாங்கத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் புதிய இணைத்தலைவர்களாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் நிமிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இந்த ஆண்டு (2015) அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 7451.28 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுங்செழியன் தெரிவித்தார்.

இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள 1,222 அபிவிருத்தித்திட்டங்களுக்காக இந்த  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் விசேட திட்டத்தின் கீழ் 123 திட்டங்களுக்காக  3.524 மில்லியன் ரூபாய் நிதியும்  கிழக்கு மாகாணசபையிலிருந்து 212 திட்டங்களுக்காக 657.46 மில்லியன் ரூபாய் நிதியும்  அமைச்சுக்களிலிருந்து 608 திட்டங்களுக்காக 1.895.63 மில்லியன் ரூபாய் நிதியும்  ஐரோப்பிய ஒன்றிய திட்டத்தின் கீழ் 216 திட்டங்களுக்காக 685.38 மில்லியன் ரூபாய் நிதியும் அரசசார்பற்ற நிறுவனங்களின் 63 திட்டங்களுக்காக 688.81 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .