2025 மே 17, சனிக்கிழமை

மூங்கிலாற்றில் மண் அகழ்ந்தவர் கைது

Gavitha   / 2015 மே 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறணைமடுப்பகுதியில்  அனுமதிப்பத்திரம் இருந்தும் நேரவரையின்றி இன்றி சட்டவிரோதமாக மண் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன், அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாற்றில் இருந்து, வியாழக்கிழமை (07) அதிகாலை இறாணமடுப்பிரதேசத்துக்கு  அப்பிரதேசத்தைச் சேர்ந்த நபர் மண் ஏற்றிவரும்போது, வெல்லாவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி றசித்சம்பத் தலைமையிலான பொலிஸ் குழு குறித்த நபரை கைது செய்துள்ளது.

கைது செய்த நபரை நீதிமன்றதில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .