2025 மே 17, சனிக்கிழமை

மட்டு-கல்முனை வீதியில் பாரிய விபத்து: தந்தையும் மகனும் படுகாயம்

Kogilavani   / 2015 மே 08 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் வியாழக்கிழமை(7) மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில், தந்தையும் மகனும் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்; அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்

விபத்துடன் தொடர்புடைய வானின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் கல்முனையை நோக்கி பயணித்த வானும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும கே.மூர்த்தி (வயது 50), மகனான அருணக்சன் (வயது 22) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.

வானின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே இவ்விபத்துக்கு காரணமென தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .