Princiya Dixci / 2015 மே 11 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று கொக்கடிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் ஆதரவாளர்களுக்கும் சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரான அருண் தம்பிமுத்துவின் ஆதரவாளர்களுக்கும் இடையிலேயே கொக்கடிச்சோலை இறால் பண்ணையில் வைத்து இந்த கைகலப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த கைகலப்பில் அருண் தம்பிமுத்துவின் ஆதரவாளர்களே காயமடைந்துள்ளனர். அவர்கள், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறால் பண்ணை செய்கையில் ஏற்பட்ட முறுகல் நிலையே கைகலப்புக்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது என்று தெரிவித்த கொக்கடிச்சோலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
13 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago