2025 மே 16, வெள்ளிக்கிழமை

'காத்தான்குடி மில்லத் வீதி செப்பனிடப்பட்டுள்ளது'

Thipaan   / 2015 மே 31 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாதவாறு சீரற்றுக் காணப்பட்ட காத்தான்குடி மில்லத் வீதி தற்போது சீர் செய்து செப்பனிடப்பட்டுள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், சனிக்கிழமை(30)  கூறினார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் எடுத்துக் கொண்ட முயற்சியினால் இது சாத்தியமாகியுள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

காத்தான்குடி மில்லத் பாடசாலை சந்தியில் உள்ள ஊர் வீதி மிகவும் மோசமாக சேதமடைந்து, மழை காலங்களில் பயணிக்க முடியாத ஓர் அவலநிலை காணப்பட்டதால் இதனூடாகப் போக்குவரத்துச் செய்வதில் மக்கள் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி வந்தனர்.

இந்த வீதியை உடனடியாகச் சீர் செய்யுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனைக் கவனித்தில் எடுத்துக் கொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை, தற்போது அந்த வீதிக்கு  தார் இட்டு செப்பனிட்டுள்ளதால் சனிக்கிழமை(30) தொடக்கம் பிரயாணிகளின் பயணம் இலகுவாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .