Suganthini Ratnam / 2015 ஜூலை 20 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹூஸைன்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்குள் நடந்த உள்ளரங்கங்களை உலகுக்கு பகிரங்கப்படுத்துவேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாமல் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டு வந்த புதியவர்கள் பலர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீல.மு.கா.வின் வேட்பாளர்களாக உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள்.இது குறித்த அதிருப்தி பொதுமக்களிடம் பரவலாக இருக்கின்றது.
எனவே, தலைவர் அஷ்ரபின் மறைவின் பின்னர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இந்தக் கட்சியை சிதைந்து விடாமல் கட்டிக் காத்து வந்ததில் முக்கிய போராளி என்ற வகையிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் என்ற வகையிலும் இந்த விடயங்களைத் பொதுமேடை போட்டுத் தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எனக்கிருக்கின்றது.
கட்சித் தாவல் இல்லாமல் இந்தக் கட்சியைக் காத்து வந்த மூத்த போராளி என்ற வகையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் இணைந்திருந்து போராடி வழிநடத்துவேன். எச்சந்தர்ப்பத்திலும் கட்சி அரசியலில் இருந்து நான் ஒதுங்கப் போவதில்லை என்றார்.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago