2025 மே 15, வியாழக்கிழமை

ஓய்வுபெற்ற கிராம அலுவலர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 20 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓய்வுபெற்ற கிராம அலுவலர்களின் சம்பள விடயம் மற்றும் அவர்கள்  காலாகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள பற்றிய கலந்துரையாடல் செங்கலடி மெதடிஸ்த தேவாலய மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட ஓய்வுபெற்ற கிராம அலுவலர் சங்கத் தலைவர் கே.வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்தும் ஓய்வுபெற்ற கிராம அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

ஓய்வுபெற்ற கிராம அலுவலர்கள் சார்பாக தமது அமைப்பு மூன்றம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக  அகில இலங்கை ஓய்வுபெற்ற ஐக்கிய கிராம அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் லெனி தர்மதாஸ தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு கூட்டமைப்பு அரசாங்கம் வரும்வரை கிராம அலுவலர்களும் அரச லிகிதர் சேவையாளர்களும் ஒரே தரத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு  ஒரே சம்பளத்தொகை வழங்கப்பட்டது. அதேவேளை, 2004ஆம் ஆண்டு லிகிதர்கள் முகாமைச் சேவைக்குள் உள்வாங்கப்படும்போது சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டது. எனினும், கிராம அலுவலர்களுக்கு அந்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை.

2004ஆம் ஆண்டு தொடக்கம் சம்பள அதிகரிப்பையும் வழங்கி மீதிப்; பணத்தையும் ஓய்வூதியத்தையும் வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.

2000ஃ06 அரச பரிபாலன சுற்றுநிரூபத்துக்கமைய கிராம அலுவலர்களுக்கு 15 மாத சம்பளம் வழங்கப்படவேண்டியுள்ளது.
2001ஆம் ஆண்டு அத்தொகையில் 10 மாத சம்பளம் வழங்கப்பட்டது. மீதி ஐந்து மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. அதை வழங்குமாறு கோருகின்றோம்.

2000ஃ06  சுற்றுநிரூப அரச சேவை சம்பளம் அதிகரிப்பு பொருத்தத்துக்;கமைய 2005ஃ01ஃ01 முதல் 2007ஃ06ஃ01  வரையான காலத்தினுள் ஓய்வுபெற்றவர்களுக்கு எவ்வரப்பிரசாதமும் கிடைக்கவில்லை. அதனால், 2006ஃ01ஃ01  முதல் ஓய்வுபெற்ற சகல கிராம அலுவலர்களுக்கும் ஓய்வூதிய அதிகரிப்பும் மீதி சம்பளத்தையும் சேர்த்து ஓய்வூதியத்தை தயாரிக்குமாறு கோருகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .