Princiya Dixci / 2015 ஜூலை 23 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
போதையற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்துக்கமைவாக போதைப்பொருள் தடுப்பு மாதத்தை முன்னிட்டு போதைப் பொருட்களை கிராம மட்டத்தில் ஒழிப்பதற்காக வேண்டி அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலயத்தில் இன்று வியாழக்கிழமை (23) நடைபெற்றது.
இதன்போது, அரச அதிகாரிகள் மக்களுடன் இணைந்து கிராம மட்டங்களில் காணப்படும் போதைவஸ்த்துக்களை எவ்வாறு ஒழித்தல்? மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய உபாயங்கள்? தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
போரதீவுப்பற்ற பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெல்லாவெளி பொது சுகாதார வைத்திய அதிகாரி குணசேகரம், போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.குபேரன், வெல்லாவெளி பொலிஸார் உட்பட திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான சுற்றறிக்கையும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமைகள் தொடர்பான பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
2 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
7 hours ago