2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

'புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு அணி திரள்வோம்' எனும் தொனிப்பொருளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் மகளிர் அமைதிப் பேரணி, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக  திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லிம் பெண்கள் இணைந்து இந்த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

'பெண் உரிமைகளை மதித்து நடக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்', 'தனது அரசியல் இலாபத்துக்காக கட்சி மாறாத வேட்பாளருக்கு வாக்களியுங்கள்', 'காணாமல் போகச் செய்தல், படுகொலைகள், அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள் செய்யாத வேட்பாளருக்கு வாக்களியுங்கள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X