2026 மே 04, திங்கட்கிழமை

4 கோடி ரூபாய் செலவில் வாகரை கட்டுமுறிவு குளம் புனரமைப்பு

Super User   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)


யுத்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான வாகரை கட்டுமுறிவு குளம் 4 கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு வருவதாக மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பிரதம பொறியியலாளர் கே.மோகனராஜ் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் இக்குளம் புனரமைக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இக்குளத்தினூடாக சுமார் 800 ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீப்ப்பாசன வசதியை வழங்கமுடியும் என அவர் தெரிவித்தார். இக்குளத்திலிருந்து எதிர்காலத்தில் சுமார் 1,100 ஏக்கர் நிலப்பரப்பிற்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .