2026 மே 04, திங்கட்கிழமை

40ஆம் கிராமத்திற்கான குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2012 மே 05 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுக்ரி)
போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட 40ஆம் கிராமத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபை  ஜெய்கா திட்டத்தின் கீழ் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளூராட்சித் திணைக்களங்களின் அணுசரனையில் 45 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் உதயகுமார், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி எஸ்.நமசிவாயம், பிரதேச செயலாளர் வில்வரெத்தினம், போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் எஸ்.சிறிதரன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .