2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

42 வீதமானோர் 6 ஆம் வகுப்போடு கல்வியை நிறுத்திவிடுகின்றனர்: ஆயர் ஜோசப்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 வீதமான மாணவர்கள் 6 ஆம் வகுப்போடு கல்வியை நிறுத்தி விடுகின்றார்கள் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கல்வி மேம்பாடு தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஆயர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தொடர்ந்துரையாற்றிய மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 வீதமான மாணவர்கள் 6 ஆம் வகுப்போடு கல்வியை நிறுத்தி விடுகின்றார்கள். இந்த செய்தி அதிர்ச்சியை தருகின்றது.

அதே போன்று 20 வயதுக்கும் குறைந்த இளம் பெண் பிள்ளைகள் கர்ப்பமடைவதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. தேசிய ரீதியில் 6.5வீதம் 20 வயதுக்கும் குறைந்த இளம் பெண் பிள்ளைகள் கர்ப்பமடையும் நிலையில் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் 10.6 வீதமாக அதிகரித்துள்ளது இது அவர்களது கல்வியினை பாதிக்கச் செய்கின்றது.

இது மாவட்டத்தின் கல்வி நிலையை பாதிக்கச் செய்வதுடன் கல்வியில் ஆர்வமின்மையும் காட்டுகின்றது.

மனித வள மேம்பாட்டுக்கு துணை நிற்பது கல்வியாகும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்திற்கும், அடிப்படையானது கல்வியாகும். நாட்டில் அறியாமையும், வறுமையையும் அழிக்க கூடிய கருவி என்றால் அது கல்வியாகத்தான் இருக்கும்.

பல்லின, பலமத, பல மொழி கலாசாரங்களை கொண்ட சூழலில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் தலைத்தோங்க கல்வி அடிப்படை காரணமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விநிலையை மேம்படுத்தவும் கல்வியை ஊக்கவிக்கவும் அனைவரும் ஒன்று பட்டு உழைக்க வேண்டும் என ஆயர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X