Kogilavani / 2011 மே 11 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டம் திக்கோடைக் கிராமத்தில் புதிதாக 50 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சின் செயலாளர், பிரதேச செயலாளர் உதயசிறிதர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீட்டு நிர்மாணிப்பிற்காக 100 லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சூரையடிக் கிராமத்தில் 47 வீடுகளை புனரமைப்பு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வு இடம்பெற்ற சிறுவர் பாடசாலையை அவதானித்த மீள் குடியேற்ற அமைச்சர் குணரட்னவீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் சிறுவர் பாடசாலையை நிர்மாணிப்பதற்காக 20 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளனர்.
இதேவேளை 47 வீடுகளை புனரமைப்பதற்கு 90 லட்சம் ரூபா நிதியையும் ஒதுக்கியுள்ளனர்.
இந் நிகழ்வில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
16 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
1 hours ago