2026 மே 04, திங்கட்கிழமை

50 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால வன்முறைகளால்  பாதிக்கப்பட்ட நிலையில், மிகவும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற 50 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க முஸ்லிம் எயிட் நிறுவனம் முன்வந்துள்ளது.

இஸ்லாமிய ஸக்காத் எனப்படும் தனவந்தர்களினால் வழங்கப்படும் ஏழைகளுக்கான நன்கொடைகள் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு இந்த வீடமைப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் ஆறுமுகத்தான் குடியிருப்பு, மீராகேணி, ஐயன்கேணி ஆகிய கிரமங்களில் 32 வீடுகளும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொடுவாமடு, தம்பானம்வெளி கிராமங்களில் ஆயுத வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பங்களுக்கு 10 வீடுகளும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடைக் கிராமத்தில் 08 வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு சுமார் 2 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படும் எனவும் அவர் கூறினார். இந்த வீடமைப்புக்கான அடிக்கல் நாட்டும் ஆரம்ப வேலைகள் இந்த வார இறுதிக்குள் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .