2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

725 விவசாயிகளுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 02 வருடங்களாக தடைப்பட்டிருந்த விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்குவது மீண்டும் திங்கட்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், 725 விவசாயிகளுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

இதன்போது, இவர்களின் வயது அடிப்படையில் ஒவ்வொருவருக்கும்  மாதமொன்றுக்கு 1,000 ரூபா தொடக்கம்  5,000 ரூபா வரை ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  விசேட கருத்திட்ட அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எஸ்.எம்.சந்திரசேன,  கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மீள்குடியேற்றப்  பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கமக்காரர் ஓய்வூதிய சபையின் பணிப்பாளர் பண்டு த.வீரசிங்க, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X