2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

90 பேருக்கு இளைஞர் விவகார அமைச்சினால் பயிற்சி

Super User   / 2013 நவம்பர் 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த 90 பேர் முழு நேர பயிற்சிகள் மேற்கொள்வதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட தேசிய கண்காட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 575 பேரில் 90 பேருக்கே இந்த பயிற்சி வழங்கப்படுகின்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர், உதவி திட்டமிடல் பணிப்பாளர்களான ஏ.சுதாகரன், ஆர்.கங்காதரன், மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த பயிற்சி நெறியில் ஏறாவூர் நகரம், ஏறாவூர் பற்று  மற்றும் கோரளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த சிறய தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுக்கு பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் சிபாரிசுடன் பொருளாதார அமைச்சினால் தொழில் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வாழைச்சேனை, கறுவாக்கேணி சமூக அபிவிருத்தி நிலையத்திலும் மற்றொரு தொகுதியினருக்கான இந்த பயிற்சிகள் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது. இதில் கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு மற்றும் கோரளைப்பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .