Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
கடந்த ஆட்சிக் காலத்தில், தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர், பொய்யான காணி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்து அபகரித்துள்ளனரென, ஏறாவூர்பற்று, செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் விஜயரத்தினம் ஜெயகணோஷ் (பிரபா) குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்படிக் காணிகளை, அரசியல்வாதிகளிடமிருந்து மீட்டுத்தருமாறு, ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் பொருட்டு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனிடம் மகஜரைக் கையளித்தார்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பல பாரம்பரியமான காணிகளை, கடந்த ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஒரு சில மாற்று சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அபகரித்துள்ளனரென, அந்த மகஜரில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொய்யான காணி உறுதிப்பத்திர ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அதிகளவான தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள காணி உறுதிப்பத்திரங்களை மீண்டும் மீளாய்வு செய்து, தமிழ் மக்களிடம் ஒப்படைக்குமாறும், செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
32 minute ago
1 hours ago
1 hours ago