Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக, அக்கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமால் நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மு.கா.வின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான சட்டத்தரணி றவூப் ஹக்கீம், கட்சியின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான பொறியியலாளர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மொலானா, தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன், கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 May 2025
20 May 2025
20 May 2025