Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமாருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தின் சமூக அபிவிருத்திச் சங்கங்கள், பொதுமக்களுக்குமான கலந்துரையாடலொன்று, பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்றது.
இதன்போது, கிராமிய அபிவிருத்திச் செயற்பாடுகள், இளைஞர், யுவதிகளின் தொழில்வாய்ப்புகள், சிறிய அளவிலான தொழிற்பேட்டை உருவாக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதில் கலந்துகொண்டோர்களால், அமைப்பாளரிடம் முன்வைக்கப்பட்ட திட்டங்கள், ஜனாதிபதிச் செயலகத்துக்குச் சமர்ப்பிக்கும் வகையில் முன்மொழியப்பட்டன.
பொதுஜன பெரமுன கட்சியின் மாவட்ட மகளிர் அணித் தலைவி எஸ்.காஞ்சனா, மண்முனை தென் எருவில்பற்று இணைப்பாளர் கு.கணேசலிங்கம், தேற்றாத்தீவு பிரதேச குழு தலைவர்களான ஆர்.சிவகுமாரன், ஈ.இளஞ்செழியன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர், யுவதிகள் எனப் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago