Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 08 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி , எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன் , ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்ட சிறுபோக விவசாயத்துக்கு, அம்பாறை மாவட்டத்திலிருந்து முதன்முறையாக நீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக, பட்டிப்பளை பிரதேச பொறியியலாளர் சதாசிவம் சுபாகரன் தெரிவித்தார்.
புளுக்குணாவி குள நீரை நம்பி செய்கையிலீடுபட்ட மட்டக்களப்பு சிறுபோக விவசாயிகளுக்கே, அம்பாறை, களுகல் ஓயா நீர்த் தேக்கத்திலிருந்து நீர் தற்போது பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
உணவு உற்பத்தியைப் பாதுகாத்தல், ஊக்கப்படுத்தல் எனும் அடிப்படையில், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர்கள் எடுத்த இந்த முயற்சி பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
விவசாயிகள், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜாவிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, அவர் அம்பாறை மாவட்டச் செயலாளரிடம் உரையாடியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், நவகிரி குளத்தில் இருந்து தற்போது புளுக்குணாவி குளத்துக்கு வந்து சேர்ந்துள்ள நீர், விவசாயிகளின் விளைநிலங்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
புளுக்குணாவி குளத்து நீரை நம்பி 2,980 ஏக்கருக்கான அனுமதி மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கு மேலதிகமாக 500 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டதால், குளத்தில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீர் போதுமானதாக இல்லாமல் இருந்தமையால், மேற்படி அம்பாறை மாவட்டத்திலிருந்து நீர் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025