Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
கடந்த அரசாங்கத்தில் 6,000 பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த முன்னாள் பிரதியமைச்சர் வி. முரளிதரன், “புதிய ஜனாதிபதியின் ஆட்சி, 10 வருடங்களுக்கு மேல் நீடிக்கவுள்ளது” என்றும் கூறினார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வென்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே, அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அபிவிருத்திப் பணிகள், வேலைவாய்ப்புகள் அனைத்தும் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்புதான் பாரியளவில் முன்னெடுக்கப்படவுள்ளன.
“கடந்த அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் 1,300 பேருக்கு இரண்டாம் மொழி ஆசிரியரானுக்கான நியமனமும் 6,000 பேருக்கு அரசியல் தேவைக்காக போலியான நியமனங்கள், எந்தவித அமைச்சரவையினதும், நிதியமைச்சின் அனுமதியின்றியும் வழங்கப்பட்டுள்ளன.
“அவ்வாறு நியமனம் பெற்றவர்கள் ஏமாரப்பட்டுள்ளார்கள். அவை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனையும் எமது புதிய அரசாங்கத்தின் பிரதமரே சரி செய்ய வேண்டியுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago