2025 மே 02, வெள்ளிக்கிழமை

‘ஆறுமுகத்தின் இழப்பு ஆறாத்துயர்’

Editorial   / 2020 மே 28 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் பேசும் மக்கள் மாத்திரமன்றி, பெரும்பான்மை சிங்கள சமூகமும் நம்பிக்கையுடன் அன்பு கொண்டிருந்த ஆறுமுகத்தின் இழப்பால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளதாக, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்து, அவர் இன்று (28) வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தொண்டமானென்ற வரலாற்றுப் பெயரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற பேரியக்கமும் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் தடம் பதித்துள்ளன. தேசிய காங்கிரஸ் நல்லதொரு சகோதரக் கட்சியின் தலைமையை இழந்து தவிக்கிறது. தனிப்பட்ட முறையில், நானுமொரு நல்ல நண்பனை இழந்த துயரத்தில் தவிக்கிறேன்.

“அந்நாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். காலத்தின் அவசரத்தால் சௌமியமூர்த்தி தொண்டமான் அமரத்துவம் அடைந்ததைப் போன்றே, இன்று ஆறுமுகம் தொண்டமானும் அமரராகி விட்டார். அவர் பிரதிநிதித்துவப்படுத்திய இந்த சமூகமும் அவரது கட்சியும் அடுத்த பொல்லை கையிலெடுத்து இலக்கு நோக்கி ஓட மேலும் பலப்பட வேண்டும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக மக்களின் விடிவுக்காக வீரியத்துடன் ஒலித்த ஆறுமுகன் தொண்டமானின் இழப்பு, மலையக மக்களுக்கு மாத்திரமின்றி, ஒட்டு மொத்த சிறுபான்மை சமூகங்களுக்கும் பேரிழப்பாகுமென, முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா விடுத்துள்ள அனுதாப செய்தியிலே குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X