Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 ஜூலை 27 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழடித்தீவு பிரதேசத்தில் காளி கோவில் ஆல மரத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம், நேற்று முன்தினம் (25) மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மகிழடித்தீவு பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குமாரசாமி திலகேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக, சம்பவத்துக்கு முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் கிணற்றில் குதித்து உயிரை தனது மாய்த்துக்கொள்ள குத்த நிலையில் குறித்த நபர் காப்பாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து சம்பவதினமான மறுநாள் அதிகாலை அவரது மனைவி ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல எழுந்து கணவரை தேடிய போது அவரை வீட்டில் காணவில்லை. எனவே, அவர் அருகில் சென்றிருக்கலாம் என நினைத்து அவர் வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் 8.30 மணிக்கு அந்த பகுதியிலுள்ள காளி கோவில் மூலஸ்தானப் பகுதியிலுள்ள ஆல மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கமைய, பிரேத பரிசோதனைக்காக மட்டு. போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
21 minute ago
25 minute ago
5 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
25 minute ago
5 hours ago
17 Aug 2025