2025 ஜூலை 26, சனிக்கிழமை

ஆலயத்தில் தங்க நகைகள் திருட்டு

வடிவேல் சக்திவேல்   / 2017 ஜூலை 29 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி நகர் கண்ணகியம்மன் ஆலயத்திலிருந்த தங்க நகைகள், வியாழக்கிழமை (27) இரவு திருட்டுப் போயுள்ளதாக மேற்படி ஆலய நிர்வாகம் தெரிவித்தது.

ஆலயத்தில் காவலாளியாக கடமையுரியும் நபர், ஆலயத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்து பார்க்கும்போது, பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்த அம்மனுக்குரிய சாரி உள்ளிட்ட பொருட்கள் வெளியே இடப்பதைக் கண்டு, பாதுகாப்புப் பெட்டகத்தைத் திறந்து பார்த்த போது, அதனுள்ளிருந்த சுமார் 4 அரைப் பவுணுக்கு மேலாக இருந்த தங்க நகைகள் திருட்டுப் போயிருப்பதை அவதானித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில், வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, ஆலய நிர்வாகம் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X