Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 02 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல், புதன்கிழமை (30) இரவு வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தலைமையில் பொலிஸ் நிலையத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
அவ்விருவரினதும் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி சுடர் ஏற்றி, பொலிஸார் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ம் திகதி வலையிறவு சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்களான கணேஸ் தினேஸ், நிரோசன் இந்திக பிரசன்ன ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹரானின் குழுவினரால் கத்தியால் குத்தியும் துப்பாக்கியாலும் சுட்டு கொலை செய்யப்பட்டு அவர்களின் துப்பாக்கிகள் அபகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago