Editorial / 2018 ஒக்டோபர் 15 , பி.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்புக் கடலில் காணப்படும் ஒருவகையான இளஞ்சிவப்பு நிறக் கடற்பாசி காரணமாக, கரைவலை மீன்பிடி பாதிப்படைந்துள்ளதென, மட்டக்களப்பு கரைவலை மீன்பிடித் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பில் தற்போது கரைவலை மீன்பிடிக்கான பருவகாலமாக இருந்தும், கரையோரத்தையொட்டி கடல் நெடுகிலும் பல்கிப் பெருகியுள்ள இந்த வகை இளஞ்சிவப்புக் கடற்பாசி, மீன்பிடி வலைகளில் பாரியளவில் சிக்குவதாகவும், மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஓந்தாச்சிமடம் கடற்கரையில் கூடுதலான கடற்பாசி, மீன்பிடி வலையில் சிக்கியதை அவதானிக்க முடிந்துள்ளது.
இது தொடர்பில் கரைவலை மீனவர்கள் தெரிவிக்கையில்,“வருடத்துக்கு ஒருமுறையே, இந்தக் கரைவலை மீன்பிடி, எமக்கு வாழ்வாதாரத்தைப் பெற உதவுகின்றது. ஒக்டோபர் மாதமே கரைவலை மீன்பிடிக்குச் சிறந்த பயனைத் தரக்கூடியதாகும்.
“ஆயினும், இம்முறை ஒருபோதும் இல்லாதவாறு ஒரு புதுவகையான கடற்பாசி, கரையோரத்தையொட்டிய கடல் பிரதேசம் நெடுகிலும் உற்பத்தியாகியுள்ளன.
“அதனால், மீன்களுக்குப் பதிலாக இந்தக் கடற்பாசியே, வலைகளில் பாரிய அளவில் சிக்குகின்றது. இதனால் மீன்பிடி வலையும் சேதமாவதுடன், நேர விரயம், உழைப்பில்லாமை, சிரமம் என்பன ஏற்படுகின்றன” என்றனர்.
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
27 minute ago
33 minute ago