2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இளம் கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 11 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலைமறை காயாகவுள்ள இளம் கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பை  ஏற்படுத்திக்கொடுப்பதற்கான முயற்சியை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதுடன், இதற்கான ஆதரவை அனைவரிடமும் எதிர்பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, நாவற்குடாவைச் சேர்ந்த ஹர்சனின் தயாரிப்பில் உருவான 'உயர்வாய்' பாடல் இறுவெட்டு வெளியீடு, அங்கு ஞாயிற்றுக்கிழமை (10) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

'எமது இளம் கலைஞர்கள் அடையாளப்படுத்தப்படாத நிலையே இருந்து வருகின்றது' எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X